search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூலித்தொழிலாளி மனைவி"

    கூலித்தொழிலாளி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்ததால் தனி மருத்துவர்கள் கொண்ட குழு கிசிச்சை அளித்தது.

    திருவாரூர்:

    திருவாரூர் தாலுகா கொத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரியதர்சினி (வயது25) நிறைமாத கர்ப்பிணியான இவர் மன்னார்குடியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் பிரியதர்சினிக்கு கருவில் 3 குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

    திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் மகப்பேறு துறை தலைவர் மருத்துவர் பாக்கியவதி தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளிக்க தொடங்கினர்.

    இந்நிலையில் 8 வது மாதம் பிரியதர்சினிக்கு பிரசவ வலி ஏற்பட்டு அவசர சிசேரியன் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. முதலில் 1.300 கிலோ எடையில் பெண் குழந்தை, அடுத்த நிமிடம் 1.680 கிலோ எடையில் ஆண் குழந்தையும், அடுத்த ஒரு நிமிடத்தில் 1.250 கிலோ எடையில் பெண் குழந்தையும் பிறந்தது.

    இந்த 3 குழந்தைகளுக்கும் மூச்சுதிணறல், மஞ்சள் காமாலை நோயுடன் பிறந்த தால் தனி மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு பல்வேறு நவீனசிகிச்சைகள் தொடர்ந்து 21 நாட்கள் அளிக்கப்பட்டது. தற்போது 3 மூன்று குழந்தைகளும் இயல்பான நிலைக்கு திரும்பி உள்ளன.

    இது குறித்து கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் கூறும்போது, ‘‘ இந்த சிகிச்சை தனியார் மருத்துவமனையில் செய்தால் ரூ. 9 லட்சம் செலவாகும். ஆனால் அனைத்து நவீன சிகிச்சைகளையும் முதல்வர் காப்பீடு திட்டத்தின் மூலம் இலவசமாக செய்யப்பட்டுள்ளது என்றார்.

    ×